Proverbs In Tamil

பழமொழிகள் (Proverbs in Tamil)

"The following Tamil proverbs have been compiled by Shri A. Subramaniam, a great scholar and teacher who had been Headmaster of several schools in Tirunelveli (Southern Tamilnadu)area. He is the maternal uncle of Mrs. Gomati, wife of Shri Y.S.Rajan."

கூர் அம்பாயினும் வீரியம் பேசேல்.
True Strength and pompous boasting ill go together..
போதும் என்ற மனமெ பொன் செய்யும் மருந்து.
Contentment is the source of happiness.
நிழல் அருமை வெயிலில் போனால் தான் தெரியும்.
Exposure to adversity will make us realize the blessings of a Shelter.
பன்றியோடு சேர்ந்த கன்றும் சீர்கேடு அடையும்.
Bad company will ruin the innocent.
பசி வந்தால் பத்தும் பற்ந்திடும்.
Acute hunger drives a person to abandon all restraints.
பேய்க்கு வாழ்க்கைப் பட்டபின் புளியமரத்தில் ஏறத்தயங்கினால் முடியுமா?
To one fallen or trapped in unholy company, there is no escape from ugly.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
An elephant, dead or alive, is a valuable asset.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான்.
However powerful one maybe, it is possible to find someone more powerful.
மாமியார் உடைத்தால் அது மண்கலம். அதையே மருமகள் உடைத்துவிட்டால் அது பொற்கலம்.
While a mother-in-law’s mistake is viewed excusable, It is not condoned if made by the daughter-in-law.
ஈட்டி எட்டும் வரை பாயும், பணமோ பாதளம் வரை பாயும்.
Whole muscle-power has limitations; the influence wielded by money-power is for reaching.
அன்பே கடவுள்
God is Love.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
Health is Wealth.
சிறு துளி பெரு வெள்ளம்
Little drops of water make a mighty ocean.
கடமைகளை ஒத்திவைப்பதால் வீணாகும் காலமே.
Procrastination is the thief of time.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
Even a trivial thing can serve an useful purpose
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
The size of a thing does not necessarily indicate its potency
ஏவா மக்கள் மூவா மருந்து.
An active life is antidote to the ageing process.
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
Do not kiss the boots that kick you
புழக்கடைப் பச்சிலையை மருந்துக்கு ஏற்பதில்லை.
No prophet is recognized in his native land
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
Contentment is the source of happiness.
பன்றியோடு சேர்ந்த கன்றும் சீர்கேடு அடையும்
Bad company will rain the innocent
ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு
An angry person in haste can't exercise calm judgment.
பசி வந்திடப் பத்தும் பறந்திடும்
Acute hunger dives a person to abandon all restraints.
உரலுக்கு ஒரு புறம் இடி, மத்தளத்திற்கு இரு புறமும் அடி
Some people have to face tough problems from many side at the same
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்
To many people the lure of money is irresistible.
இடுப்பில் இரண்டு துட்டு ஏறிவிட்டால் எடுப்பில் இரண்டு வார்த்தைகள் வெடிக்கும்
Underserved prosperity breeds arrogant behavior
நாடு அறிந்த பார்ப்பனனுக்குப் பூணூல் எதற்கு?
A well known person needs no identity mark or symbol.
பசுவைக் கொன்ற பாவம் செறுப்பு தானம் செய்துவிட்டால் தீர்ந்துவிடுமா?
A deliberately committed crime can't be expiated by symbolic atonement.
குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல.
Sometimes undeserved success is achieved by sheer chance.
காது அறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே!
Nothing will accompany us during our last journey on earth.
குறிக்கோள் எதுவாயினும் அதை அடையும் பாதை நேர்மையாகவே இருக்க வேண்டும்
The end should always be justified by the means.
பொன்னினும் பொலிவுகள் வரை ஊக்குவிக்கும்
Beauty provoke thief sooner than gold
துஷ்டனைக் கண்டால் தூரவிலகு
Keep away from the wicked.
சூரியனைப் பார்த்து நாய் குலைப்பதால் ஆகப்போவது என்ன?
It is futile and laughable for a note less weakling to rail al a great person
வெளுத்த தெல்லாம் பாலல்ல, கருத்ததெல்லாம் நீரல்ல.
Appearances may be very deceptive.
தானும் பிறரும் பயன் அடையத் தடையாக இருப்பது முரட்டுப் பிடிவாதம்
A dog in the manager benefits none
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?
Spoken words are superfluous when long separated persons are recited.

We thank Mr. A. Subramanian for contributing the above Tamil proverbs.